அமெரிக்க அதிபராக பதவியேற்க உள்ள டொனால்ட் டிரம்ப், 2016 ஆம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தின் போது ஆபாச நடிகை ஸ்டார்மி டேனியல்ஸுக்கு $1.3 லட்சம் (சுமார் ₹1 கோடி) வழங்கியதாக குற்றம்சாட்டப்பட்டார். இந்த பணம், அவர்களுக்கிடையிலான உறவை மறைக்க வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
நியூயார்க் நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கில், டிரம்ப் குற்றவாளி என 12 ஜூரிகள் அடங்கிய குழு அறிவித்தது. நீதிபதி ஜுவான் மெர்ச்சன், டிரம்புக்கு எதிரான தண்டனை மற்றும் தீர்ப்பு விவரங்களை ஜனவரி 10, 2025 அன்று அறிவிப்பதாக தெரிவித்தார்.
அமெரிக்க அதிபராக பதவியேற்க உள்ள நிலையில், இந்த தீர்ப்பு அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறைத் தண்டனை விதிக்கப்படாமல், அபராதம் அல்லது நன்னடத்தை கண்காணிப்பு போன்ற தண்டனைகள் விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
டிரம்ப், இந்த வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி மேல்முறையீடு செய்திருந்தாலும், அது நிராகரிக்கப்பட்டது. அதனால், தண்டனை அறிவிப்பு ஜனவரி 10 அன்று நடைபெற உள்ளது.