TTF வாசன், கோவையைச் சேர்ந்த பிரபல யூடியூபர், தனது அதிவேக பைக் சாகசங்கள் மற்றும் போக்குவரத்து விதிகளை மீறிய செயல்களால் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ளார்.
தற்போது ஒரு மலைப்பாம்புவை வளர்த்து வருகிறார் அதுக்கு பப்பி என்று பெயரிட்டுள்ளதாகவும். அதன் வயது 2 அதற்கு தாய் தந்தை எல்லாம் வாசன் தான் இது மகாராஷ்டிராவில் டிரெக்கிங் போகும் போது கிடைத்ததாகவும் கூறும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இது சம்பந்தமாக வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்ச்சியாக TTF வாசன் சர்ச்சைகளில் சிக்கி வருவது பொது மக்கள் மத்தியில் பேசும் பொரளாக மாறியுள்ளது.
மேலும் TTF வாசன் சிக்கிய முக்கியமான சில சர்ச்சைகள்.

2023 ஆம் ஆண்டில், காஞ்சிபுரம் அருகே நடந்த ஒரு சம்பவத்தில், அவர் வீலிங் சாகசத்தில் ஈடுபட்டு, விபத்தில் படுகாயமடைந்தார்.
இந்தச் சம்பவத்தையடுத்து, காஞ்சிபுரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலர், அவரது ஓட்டுநர் உரிமத்தை 10 ஆண்டுகளுக்கு, அதாவது 2023 அக்டோபர் 6 முதல் 2033 அக்டோபர் 5 வரை ரத்து செய்யப்பட்டது.
இந்த நடவடிக்கை, சாலை பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்டதாகவும், பொதுமக்கள் மற்றும் இளைஞர்களுக்கு எச்சரிக்கை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
2023 ஜனவரி: சென்னையில், நம்பர் பிளேட் இல்லாமல் காரை இயக்கியதற்காக அவரது வாகனம் போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்டது.
2023 நவம்பர்: TTF வாசன் போன்றவர்கள் மீது டாக்டர் அலிஷா அப்துல்லா கடுமையான விமர்சனங்களை வெளியிட்டார்.
2023: அஜாக்கிரதையாக வாகனத்தை இயக்குதல், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல், வேகமாக வாகனம் ஓட்டுதல், சாலையில் விபத்து ஏற்படுத்துதல் போன்ற குற்றச்சாட்டுகளுக்கு அவர் நிபந்தனை ஜாமீன் பெற்றார்.
2023: சென்னையில், செல்போனில் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டியதற்காக அவர் மீண்டும் சர்ச்சையில் சிக்கினார்.
இந்தச் சம்பவங்கள், TTF வாசன் மீது பல்வேறு விமர்சனங்களையும், சட்ட நடவடிக்கைகளையும் ஏற்படுத்தியுள்ளன.