திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடியில் அரசு உதவி பெறும் உயர்நிலைபள்ளியில் 10-ம் வகுப்பு மாணவிக்கு ஆசிரியர் பன்னீர்செல்வம், அலைபேசியில் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பி, பேசியது குறித்து மாணவி குடும்பத்தினர் பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்தனர்.
விசாரணையில் புகார் உண்மை என தெரிய வந்த நிலையில் பள்ளி நிர்வாகம் பன்னீர்செல்வத்தை தற்காலிக பணி நீக்கம் செய்திருந்தது. ஆசிரியரிடம் உரிய விளக்கம் கிடைக்கப்பெறாத நிலையில் ஒழுங்கு நடவடிக்கை குழு மூலம் ஆசிரியரை நிர்வாகம் பணி நீக்கம் செய்துள்ளது.
பள்ளி செயலாளர் முருகேசன் கூறுகையில்,”புகார் குறித்து விளக்கம் கோரி கடிதமும் அனுப்பப்பட்டது. விளக்கம் திருப்தியில்லாத நிலையில் ஆசிரியர் செய்தது தவறு என தெரிய வந்ததால் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்றார்.