முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம்

பெரியார் ஒழுக்கம் இல்லாதவர் ! சீமான் கூறியது சரிதான். – ஜான் பாண்டியன் பேட்டி. சீமான் நன்றி பதிவு.

By Web Desk

Published on:

---Advertisement---

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சமீபத்தில் பெரியார் குறித்து சில கருத்துகளை வெளியிட்டார், இது தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் கண்டனத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜான் பாண்டியன், நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்து, “பெரியார் ஒழுக்கமான மனிதர் கிடையாது. அவரது பெயரை பயன்படுத்தி பெரிய ஆள் போல காட்டுகிறார்கள். எந்த சாதனையும் அவர் செய்ததில்லை. தீண்டாமையை ஒழித்ததாக சொல்வார்கள். ஆனால் தற்போதும் தீண்டாமை தலை தூக்கி உள்ளது. பெரியார் ஒன்றும் தமிழகத்தில் சீர்திருத்தவாதி கிடையாது. சீமான் பேசியதில் எந்த தவறும் கிடையாது. அவர் பேசியது சரிதான்.” எனக் கூறினார்.

ஜான் பாண்டியன் வெளியிட்ட இந்த கருத்துக்கு, சீமான் தனது எக்ஸ் (முன்னாள் ட்விட்டர்) பக்கத்தில் நன்றி தெரிவித்து, “போற்றுதற்கும், வணக்கத்திற்குரிய தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனத் தலைவர் அண்ணன் ஜான் பாண்டியன் அவர்கள் பெரியார் குறித்து இன்று கூறிய கருத்துக்களை வரவேற்கிறேன். சரியான நேரத்தில் சரியான கருத்துகளைப் பதிவுசெய்த அன்பிற்கினிய அண்ணன் அவர்களுக்கு என்னுடைய அன்பும், நன்றியும்!” எனப் பதிவிட்டார்.