முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம்

அண்ணாமலையின் சாட்டையடி போராட்டம்.

By Web Desk

Published on:

---Advertisement---

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, இன்று (27 டிசம்பர் 2024) கோயம்புத்தூரில் தன்னைத் தானே சாட்டையால் அடித்து, திமுக அரசை எதிர்த்து கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தினார்.

காலை 10 மணியளவில், கோவையில் உள்ள தனது இல்லத்தின் முன்பாக, மேல் சட்டை அணியாமல் பச்சை வேட்டி அணிந்து, தேங்காய் நாரால் பின்னப்பட்ட சாட்டையால் தன்னை 8 முறை அடித்துக் கொண்டார். அப்போது பாஜக தொண்டர்கள் “வெற்றிவேல், வீரவேல்” என முழக்கமிட்டனர்.

அண்ணாமலை இந்த போராட்டத்தை, அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவத்தை கண்டித்து நடத்தினார். அவர் மேலும் திமுக ஆட்சியை அகற்றும் வரை செருப்புகள் அணிய மாட்டேன் என்றும், 48 நாட்களுக்கு விரதம் இருந்து முருகன் கோவில்களுக்கு சென்று முறையிடுவதாகவும் கூறியுள்ளார்.

இந்த போராட்டம் தமிழக அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதத்துக்கு உள்ளாகியுள்ளது.