முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம்

தமிழக அரசுக்கு ரூ 39,000 கோடி இழப்பு.. அதானி டெண்டர் ரத்தால் வந்த வினை!

By Web Desk

Published on:

---Advertisement---

தமிழ்நாடு மின்சார வாரியம் (TANGEDCO) அதானி எனர்ஜி சால்யூஷன்ஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட ஸ்மார்ட் மீட்டர் கொள்முதல் டெண்டரை ரத்து செய்துள்ளது. இந்த நடவடிக்கையால், தமிழக அரசுக்கு ரூ.39,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

டெண்டர் ரத்தானது ஏன்?

அதானி நிறுவனம் குறைந்த தொகையை முன்மொழிந்திருந்தாலும், அது மின்சார வாரியத்தின் மதிப்பீட்டை விட அதிகமாக இருந்ததால், டெண்டர் ரத்து செய்யப்பட்டது.

இழப்பின் விவரங்கள்:

புதுப்பிக்கப்பட்ட மின் விநியோகத் திட்டத்தின் இலக்குகளை பூர்த்தி செய்யாததால், மத்திய அரசிடம் இருந்து கிடைக்கவிருந்த ரூ.30,000 கோடி நிதி உதவி தமிழக அரசுக்கு கிடைக்காமல் போயுள்ளது.

மேலும், மத்திய அரசின் திட்டத்தை செயல்படுத்தியதற்காக வழங்கப்பட்ட ரூ.9,000 கோடி நிதி உதவியும் இழக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், மொத்தம் ரூ.39,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.