முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம்

கஞ்சா செடி பயிரிட்ட குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை.

By Web Desk

Published on:

---Advertisement---

கடந்த 24.06.2021 ம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் ஆணைமடுவு கிராமத்தில் எதிரி கண்ணன் (வயது 50), த/பெ. கலியன், ஆனைமடுவு கிராமம் என்பவரின் விவசாய நிலத்தில் மரவள்ளிக்கிழங்கு செடிகளுக்கிடையில் கஞ்சா பயிர் வைத்திருப்பதாக விழுப்புரம் போதைப்பொருள் நுண்ணறிவுப் பிரிவு காவல் துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், மரவள்ளிக்கிழங்கு செடிகளுக்கிடையில் பயிரிடப்பட்டிருந்த 37 எண்ணியிைலான கஞ்சா செடிகளை (25 கிலோ கிராம்) கைப்பற்றி எதிரியை கைது செய்து விழுப்புரம் போதைப்பொருள் . 32/2021 u/s. 8(b) r/w 20(a)(i) of NDPS Act – 4 பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இவ்வழக்கில் புலன் விசாரணை முடித்து எதிரி கண் ன் வயது 50. த/பெ.கலியன் என்பவர் மீது 14.07.2021 ஆம் தேதி இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, வழக்கானது விழுப்புரம் மாவட்ட போதைப்பொருள் மற்றும் மனமயக்க பொருட்கள் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் SPL.C.No.14/2021 ன் وانا நீதிமன்றத்தில் விசாரணை எடுத்துக்கொள்ளப்பட்டது. 26.12.2024 ஆம் தேதி இவ்வழக்கில் மாண்புமிகு சிறப்பு நீதிபதி திருமதி. பாக்கியஜோதி (பொறுப்பு) போதைப்பொருள் மற்றும் மனமயக்க பொருட்கள் சட்ட சிறப்பு நீதிமன்றம், விழுப்புரம் அவர்கள் எதிரி கண்ணன் வயது 50, த/பெ. கலியன், ஆணைமடுவு கிராமம் என்பவருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையுடன் ரூபாய் 1,00,000/- அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். எதிரி நீதிமன்ற உத்தரவுப்படி கடலூர் மத்திய சிறையில் அடைத்து வைக்கப்பட்டார். இவ்வழக்கில் அரசு வழக்கறிஞர் திரு. கொடுமுடி சேரலாதன் திறம்படவாதிட்டார்.

இவ்வழக்கில் திறம்பட புலன் விசாரணை மேற்கொண்டு நீதிமன்றத்தில் விசாரணை முடித்து குற்றிவாளிக்கு தண்டனைப் பெற்று தந்த புலன்விசாரணை அதிகாரி மற்றும் ஆளிநர்களை கூடுதல் காவல்துறை இயக்குநர் முனைவர்.அ.அமல்ராஜ் இகாப, (அமலாக்கப் பணியகம் குற்ற புலனாய்வுத் துறை), காவல் துறை தலைவர் திரு.மயில்வாகனன் இ.கா.ப (அமலாக்கப் பிரிவு) மற்றும் திரு. மயில்வாகனன், காவல் கண்காணிப்பாளர், போதைப்பொருள் நுண்ணறிவுப்பிரிவு, சென்னை ஆகிய அதிகாரிகள் வெகுவாக பாராட்டினார்கள்.