முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம்

பாஜக எம் எல் ஏ மீது முட்டை வீச்சு

By Web Desk

Published on:

---Advertisement---

கர்நாடக மாநிலம் பெங்களூருவில், பாஜக எம்.எல்.ஏ மற்றும் முன்னாள் அமைச்சரான முனிரத்னா மீது முட்டை வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் 100வது பிறந்தநாளை முன்னிட்டு, லட்சுமிதேவி நகர் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முனிரத்னா கலந்து கொண்டார். நிகழ்ச்சி முடிந்தபின், அவர் நடந்து சென்றபோது மர்ம நபர்கள் அவரது தலையில் முட்டை வீசியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.

நந்தினி லேஅவுட் போலீசார் இந்த விவகாரம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாஜக தரப்பில், காங்கிரஸ் கட்சியினரே முனிரத்னா மீது முட்டை வீசியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.