முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம்

பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் மிக உயரிய விருது வழங்கி கவுரவிப்பு

By Web Desk

Published on:

---Advertisement---

பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறை பயணமாக குவைத் சென்றுள்ளார். விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்திய வம்சாவளியினர் ஒன்று சேர்ந்து பிரதமர் மோடியை வரவேற்றனர்.

வளைகுடா ஸ்பிக் தொழிலாளர் முகாமிற்கு சென்ற பிரதமர் மோடி அங்குள்ள இந்திய தொழிலாளர்களை சந்தித்து நலம் விசாரித்தார். அவர்களுடன் உற்சாகமாக கலந்துரையாடினார்.

பிறகு, குவைத்தின் ஷேக் சாத் அல் அப்துல்லா விளையாட்டு உள்ளரங்கில், ஹாலா மோடி என்ற தலைப்பில் இந்திய வம்சாவளியினர் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், குவைத் ஆட்சியாளர்களுடன் நான் பேசும்போது எல்லாம் இந்தியர்களை அவர்கள் புகழ்ந்து பேசுகின்றனர் என தெரிவித்தார்.

இந்நிலையில், குவைத் சென்றுள்ள பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் உயரிய ஆர்டர் ஆஃப் முபாரக் அல் கபீர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது. இந்த விருது இதற்கு முன்பாக பில் கிளிண்டன், ஜார்ஜ் புஷ், சார்லஸ் உள்ளிட்ட தலைவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.