நேற்று 23.12.2024 சத்தீஸ்கரின் பிஜாப்பூர் மாவட்டம் பாம்டு ( Pamed ) காவால் நிலைய கட்டுப்பாட்டில் உள்ள கொம்குடாவில் உள்ள துணை இராணுவப்படையான சிஆர்பிஎஃப் (CRPF) முகாம் மீது நக்சல் குழு திடீர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த தாக்குதலின் போது, வீரர்கள் முற்றிலும் அவசர நடவடிக்கை மேற்கொண்டு எதிர் தாக்குதல் நடத்தினர், அதன் மூலம் நக்சல்களின் திட்டத்தை முறியடித்தனர்.

இந்த சம்பவத்தில் சில மணி நேரம் தொடர்ந்து நடந்த துப்பாக்கிச்சண்டையில், CRPF-யின் கோப்ரா (COBRA) சிறப்பு படைப்பிரிவைச் சேர்ந்த கமாண்டோக்கள் துயர் பாடீல் மற்றும் சுபாஷ் குமார் தாஸ் ஆகியோர் காயமடைந்தனர். காயமடைந்த வீரர்களை உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்கப்பட்டது.

நக்சல்களின் தாக்குதல்களை கட்டுப்படுத்தும் முயற்சியாக, CRPF தொடர்ந்து போராடி வருகின்றனர். மேலும் வனப்பகுதிகளில் முன்னணி பாதுகாப்பு முகாம்களை (FOB) அமைத்து வருகிறது.