டெல்லியில் 25 வயதுடைய இளைஞர், தனது தந்தையுடன் ஏற்பட்ட தகராறின் போது ஆத்திரத்தில் ஒரு ஷேவிங் ரேசரை முழுங்கியுள்ளார். உடனடியாக வயிற்று வலி ஏற்பட்டதால், அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
மூல்சந்திரா மருத்துவமனைக்கு வந்தபோது, அந்த இளைஞரின் நிலைமை சீராக இருந்தது. ஆனால், அவசர சிகிச்சை பிரிவில் மேற்கொள்ளப்பட்ட எக்ஸ்-ரே மற்றும் எண்டோஸ்கோப்பி பரிசோதனைகளில், அவரது வயிற்றில் 7 செ.மீ நீளமுள்ள ஷேவிங் ரேசர் இருப்பது கண்டறியப்பட்டது.
மருத்துவர்கள் எண்டோஸ்கோப்பிக் சிகிச்சை மூலம் 20 நிமிடங்களில் ரேசரை வெற்றிகரமாக அகற்றினர். இந்த சிகிச்சையின் போது, வயிற்றில் எந்த பாதிப்பும் ஏற்படாததை மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.
சிகிச்சைக்கு பிறகு, இளைஞர் குணமடைந்துள்ளார். இந்த நிகழ்வு, ஆத்திரத்தில் செய்யப்படும் செயல்களின் தீவிர விளைவுகளை நினைவூட்டுகிறது. மனநல ஆலோசனையின் முக்கியத்துவத்தை மக்களிடம் அறியச் செய்யும் நிகழ்வாகவும் இது பார்க்கப்படுகிறது.