புதுச்சேரியில் நடைபெற்ற பாமக பொதுக் குழுவில், அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அக்கட்சியின் தலைவர் அன்புமணி இடையே நேற்று மோதல் வெடித்த நிலையில், இன்று காலை தைலாபுரம் இல்லத்தில் ராமதாசை சந்திக்கிறார் அன்புமணி…
பாமக கெளரவ தலைவர் ஜிகே மணி தலைமையிலான 4 பேர் கொண்ட மூத்த நிர்வாகிகள் குழு அன்புமணியுடன் ஆலோசித்த பிறகு, நிர்வாகிகள் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில், ராமதாசை சந்தித்து பேசுகிறார் அன்புமணி
இந்த சந்திப்பின் போது நேற்று நடைபெற்ற நிகழ்வுகள் குறித்து இருவரும் மனம் விட்டு பேச உள்ளனர். இதன் மூலம் ராமதாஸ் – அன்புமணி இடையேயான மோதல் முடிவுக்கு வரும் என தெரிகிறது. ராமதாசை அன்புமணி சந்தித்து பேச இருப்பது பாமக தொண்டர்களையும் நிம்மதி அடைய செய்துள்ளது.